Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
வீட்டிலேயே சுவையான பன்னீர் பிட்சா செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ளோர் பிட்சாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பிட்சாவை வீட்டில் செய்து கொடுங்கள். பிட்சா செய்வது மிகவும் சுலபம். அதுவும் அதை வீட்டிலேயே செய்தால், அது ஆரோக்கியமானதாக இருக்கும்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பிட்சாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பிட்சாவை வீட்டில் செய்து கொடுங்கள். பிட்சா செய்வது மிகவும் சுலபம். அதுவும் அதை வீட்டிலேயே செய்தால், அது ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் வீட்டில் பிட்சா செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், பன்னீர் பிட்சா செய்து கொடுங்கள்.

உங்களுக்கு பன்னீர் பிட்சா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பிட்சாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பிட்சா பேஸிற்கு...
* கோதுமை மாவு - 1 1/4 கப்
* இன்ஸ்டன்ட் ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப் + 1/4 கப்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* ஆலிவ் ஆயில் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
டாப்பிங்கிற்கு...
* பன்னீர் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
* மொசரெல்லா சீஸ் - 3/4 கப் (துருவியது)
* ஆரிகனோ - 1/4 டீஸ்பூன்
* குடைமிளகாய் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* பிட்சா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம்- 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
அலங்கரிக்க...
* ஆரிகனோ - தேவையான அளவு
* சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 1/4 கப் வெதுவெதுப்பான நீரில், சர்க்கரை, இன்ஸ்டன்ட் ஈஸ்ட், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவை சேர்த்து கலந்து, மீதமுள்ள 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, மூடி வைத்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைக்கும் போது மாவு நன்கு உப்பி வந்திருக்கும்.
* பின்பு பிசைந்த மாவை இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* அதில் ஒரு பகுதியை எடுத்து பிட்சாவின் மெல்லிய பேஸாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு ஃபோர்க்கை எடுத்து பேஸில் ஆங்காங்கு துளையிட வேண்டும்.
* பின்பு ஓவனை 10 நிமிடத்திற்கு 150 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அதில் தக்காளி சாஸ், மிளகுத் தூள், ஆரிகனோ ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி பின் லேசாக மாவைத் தூவி, தேய்த்து வைத்துள்ள பிட்சா பேஸை அதில் வைத்து, பின் ட்ரேயை ஓவனில் 7-9 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
* பிட்சா பேஸ் தயாரான பின்னர், அதன் மேல் சிறிது பாலைத் தடவி, பின் அதன் மேல் பிட்சா சாஸை தடவ வேண்டும். பின் ஓவனை 10 நிமிடத்திற்கு 200 டிகிரி செல்சியஸிற்கு சூடேற்ற வேண்டும்.
* பின்பு அந்த பிட்சா பேஸ் மேலே துருவிய சீஸை தூவ வேண்டும். அதன் பின் வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பன்னீர் துண்டுகளை மேலே வைத்து, மீதமுள்ள சீஸை தூவ வேண்டும்.
* பின் அந்த பிட்சாவை ஓவனில் 5 நிமிடம் வைத்து எடுத்தால், சுவையான பன்னீர் பிட்சா தயார். அதன் மேல் ஆரிகனோ மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி பரிமாறுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










