சுவையான மற்றும் சத்தான... பன்னீர் பராத்தாவை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?

Posted By:

Paneer Paratha Recipe In Tamil: ஒவ்வொரு வேளை சமைக்கும் போதும் என்ன சமைப்பது என்றே பல மணிநேரம் யோசிப்பீர்களா? இன்று இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் சப்பாத்தியை சாப்பிட்டு போடித்துவிட்டதா? அப்படியானால் இன்று பராத்தாவை முயற்சி செய்யுங்கள்.

பராத்தா என்பது சப்பாத்தியினுள் மசாலாவை வைத்து செய்யக்கூடிய ரெசிபி. இதில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்தது. அதுவும் நீங்கள் பன்னீர் பிரியர் என்றால், அந்த பன்னீரைத் துருவி அத்துடன் மசாலாக்களை சேர்த்து பிரட்டி சப்பாத்தியின் உள்ளே வைத்து ஸ்டஃப் செய்யுங்கள்.

Paneer Paratha Recipe

இந்த பன்னீர் பராத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பராத்தாவிற்கு சைடு டிஷ் ஏதுவும் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள், ஊறுகாய் அல்லது தயிரைத் தொட்டு சாப்பிடலாம்.

உங்களுக்கு பன்னீர் பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 1 1/2 கப்
* மைதா - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு...

* துருவிய பன்னீர் - 1 1/2 கப்
* பச்சை மிளகாய் - 5-6 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து, நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஸ்பூன் எண்ணெயை மேலே தடவி மூடி வைத்து குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் துருவிய பன்னீர், பச்சை மிளகாய், கரம் மசாலா, மல்லித் தூள், சாட் மசாலா, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள மாவை சம உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து, அதை சற்று தட்டையா தேய்த்து, நடுவே சிறிது பன்னீர் கலவையை வைத்து, மூடி, மீண்டும் தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள பராத்தாவை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பன்னீர் பராத்தா தயார்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Friday, December 29, 2023, 20:36 [IST]
Desktop Bottom Promotion