Latest Updates
-
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பன்னீர் மில்க் கிரேவி
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பன்னீரைக் கொண்டு எளிமையான முறையில் ஒரு அருமையான கிரேவி செய்யுங்கள்.
உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா? இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பன்னீரைக் கொண்டு எளிமையான முறையில் ஒரு அருமையான கிரேவி செய்யுங்கள். அது தான் பன்னீர் மில்க் கிரேவி. இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் மில்க் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மில்க் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* பால் - 1 கப்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாலில் சோள மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே பேனில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி, சிறிது நீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இப்போது சோள மாவு கலந்த பால் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், பன்னீர் மில்க் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications