Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
பன்னீர் நெய் ரோஸ்ட்
பொதுவாக சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த பன்னீர் நெய் ரோஸ்ட் அதை விட அட்டகாசமாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு அற்புதமான சைடு டிஷ் செய்யுங்கள். அது தான் பன்னீர் நெய் ரோஸ்ட். பொதுவாக சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த பன்னீர் நெய் ரோஸ்ட் அதை விட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் நெய் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபின் ஸ்பூன்
* நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
* புளி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி வரமிளகாய் - 6
செய்முறை:
* முதலில் பன்னீரை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சுடுநீரில் புளியை போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் வரமிளகாயைத் தவிர அனைத்தையும் போட்டு, 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் வரமிளகாயை போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
* பிறகு வறுத்த பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி நீரை ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த நெய்யில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து சில நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் தயார்.
குறிப்பு:
* இந்த ரெசிபிக்கு எண்ணெயை பயன்படுத்தாதீர்கள். நெய் பயன்படுத்தினால் தான் சுவை அற்புதமாக இருக்கும்.
* உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
* பன்னீரை நீண்ட நேரம் வேக வைத்து விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் ரப்பர் போன்று ஆகிவிடும்.
* வேண்டுமானால் பன்னீர் வறுக்காமல், மசாலாவில் போட்டு பிரட் ஊற வைத்தும் பயன்படுத்தலாம்.
* பன்னீரை வறுத்துப் பயன்பத்தினால், அது நல்ல சுவையைத் தரும்.
* உங்களுக்கு கிரேவியாக வேண்டுமானால், சற்று நீராக இருக்கும் போதே இறக்கிக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட நினைத்தால், நீரை வற்றவிடலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications