Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பன்னீர் ப்ரை
உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் பன்னீர் ப்ரை. இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் பன்னீர் ப்ரை. இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பன்னீர் ப்ரை எப்படி செய்வதென்று தெரியாதா?

கீழே பன்னீர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* கெட்டி தயிர் - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1-2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பன்னீரை ஓரளவு மெல்லியத் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீர் ஊற்றி, மிகவும் கெட்டியாக பிசையாமல், ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் ப்ரை தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
