Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஒருடைம் பன்னீர் சப்பாத்தியும்.. அதுக்கு சைடு டிஷ்ஷா பன்னீர் சாஸ்-ம் செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Paneer Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் அந்த சப்பாத்திக்கு எப்போதும் குருமா, கிரேவி என்று செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை வெறும் சப்பாத்தியை செய்யாமல், சற்று ஸ்பெஷலாக பன்னீர் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் சாஸ் செய்யுங்கள். இப்படி செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
உங்களுக்கு பன்னீர் சப்பாத்தி மற்றும் பன்னீர் சாஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் சாஸ் மற்றும் பன்னீர் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* துருவிய பன்னீர் - 1 கப்
* துருவிய சீஸ் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
பன்னீர் சாஸ்...
* முந்திரி - 1 கைப்பிடி
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* பன்னீர் - சில துண்டுகள்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பால் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் சிறிது
உப்பு சேர்த்து, எண்ணெய் ஊற்றி கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு
மென்மையாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் சீஸை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சிறிது உப்பு
மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, கொஞ்சம் கொத்தமல்லியைத் தூவி,
நன்கு கிளறி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பன்னீர் சாஸ் செய்வதற்கு முந்திரி மற்றும் வரமிளகாயை
சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிது எடுத்து உருட்டி,
வட்டமாக தேய்த்து, முனைப்பகுதியை கத்தியால் கீறி நீக்கி, சதுர வடிவில்
செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவின் நடுவே பன்னீர் கலவையை வைத்து, முனைகளால்
சப்பாத்தியை மூட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து
கொள்ள வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து
வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு நெய் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், பன்னீர் சப்பாத்தி தயார்.
* இறுதியாக மிக்சர் ஜாரில், ஊற வைத்துள்ள முந்திரி மற்றும் காஷ்மீரி
வரமிளகாயை எடுத்து, அத்துடன் சிறிது பன்னீர் துண்டுகள், மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது பாலை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், பன்னீர் சாஸ்
தயார்.
* இந்த பன்னீர் சப்பாத்தியை பன்னீர் சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால்
இன்னும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications