Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற பன்னீர் புர்ஜி கிரேவி - சிம்பிளா 10 நிமிடத்தில் எப்படி செய்யணும் தெரியுமா?
Paneer Burji Masala Gravy In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி என்று செய்வீர்களா? அதற்கு வாய்க்கு ருசியாக சைடு டிஷ் செய்ய நினைப்பீர்களா? அதற்காக அடிக்கடி பன்னீரை வாங்கி கிரேவி செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் பன்னீர் கிரேவி செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பன்னீர் கிரேவி செய்வதாக இருந்தால், ரெஸ்டாரண்ட்டில் கொடுக்கப்படும் சுவையில் பன்னீர் கிரேவியை செய்யுங்கள்.
அதுவும் பன்னீரை துண்டுகளாக்கி செய்யாமல், துருவி செய்யுங்கள். இதனால் பன்னீர் புர்ஜி கிரேவியானது இன்னும் சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியை 10 நிமிடத்தில் வேகமாக செய்யலாம். அந்த அளவில் இது ஈஸியான செய்முறையைக் கொண்டது. பேச்சுலர்கள் கூட இந்த கிரேவியை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புர்ஜ் மசாலா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புர்ஜ் மசாலா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* முந்திரி - 5 (பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்)
* பிரஷ் க்ரீம்/ வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தக்காளி கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் ஊற
வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட வேண்டும். அதன் பின் தோல் நீக்கிய
தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, வெங்காயத்தை நிறம் மாறும்
வரை நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள்,
கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க
வேண்டும்.
* பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போய் எண்ணெய்
பிரியும் வரை 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் பாலில் ஊற வைத்து அரைத்த முந்திரி விழுதை சேர்த்து
கிளறி, அதன் பின் பிரஷ் க்ரீம் அல்லது வெண்ணெயை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் வேக வைத்து இறக்கி, கசூரி மெத்தியைத் தூவி கிளறினால், சுவையான
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
