Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
பன்னீர் பிரியாணி
சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
பிரியாணி பலரது விருப்பமான உணவு. இந்த பிரியாணியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் சாப்பிடுவது சிக்கன், மட்டன் பிரியாணியாகவே இருக்கும். ஆனால் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம். அதெல்லாம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்தது.

உங்களுக்கு காய்கறிகள் சேர்க்காமல், பன்னீர் பயன்படுத்தி பிரியாணி செய்ய வேண்டுமானால், கீழே பன்னீர் பிரியாணி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 2 கப்
* பன்னீர் - 250 கிராம்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 5 (நறுக்கியது)
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 4 பற்கள்
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* புதினா இலைகள் - சிறிது
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். அதன்பின் புதினா இலைகளையும், கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு முறை கிளறி விட்டால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications