Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Palakottai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் பலாக்கொட்டை உள்ளதா? அப்படியானால் அந்த பலாக்கொட்டை தூக்கி போடாமல், அதைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள், அதுவும் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்யும் போது, சுவை வேற லெவலில் பிரமாதமாக இருக்கும். இந்த குழம்பை சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பலாக்கொட்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்கொட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3
* சோம்பு - 1/4
* கடுகு - 1/4
* உளுத்தம் பருப்பு - 1/4
* சீரகம் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* சின்ன வெங்காயம் - 1 கப்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
* மாங்காய் - 3 சிறிய துண்டு
* பலாக்கொட்டை - 1 கப்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* வதக்கி அரைத்த மசாலா
மசாலா வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சின்ன வெங்காயம் - 2 கையளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பலாக்கொட்டையை குக்கரில் சேர்த்து, அவை மூழ்கும் அளவில்
நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய
விட்டு, பின் அதில் 2 கையளவு சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கிளறி பச்சை வாசனை போக வதங்கியதும், இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மாங்காய் மற்றும் வேக வைத்த பலாக்கொட்டையை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
தேவையான அளவு நீரை ஊற்றி மூடி வைத்து, காய்கறிகள் வேகும் வரை நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை கொதித்துக்
கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான பலாக்கொட்டை குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications