Latest Updates
-
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Pachai Salna Recipe in Tamil: பெரும்பாலான மக்கள் புரோட்டா சாப்பிடுவதற்கு காரணமே அதனுடன் பரிமாறப்படும் சால்னாதான். உங்களுக்கும் சால்னா என்றால் பிடிக்குமா? அப்படிஎன்றாள் கொஞ்சம் வித்தியாசமான மற்றும் சூப்பரான சால்னாவை உங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அந்த வித்தியாசமான சால்னா வேறொன்றுமில்லை பச்சை சால்னாதான்.

இந்த சால்னா புரோட்டாவிற்கு மட்டுமின்றி, சப்பாத்தி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த பச்சை சால்னா சுவையாக இருப்பது மட்டுமின்றி செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. உங்களுக்கு இந்த சூப்பரான பச்சை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைக்க வேண்டியவை:
- 1 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன்கசகசா
- 1/4 கப் தேங்காய்
- சிறிய துண்டு கல்பாசி
- 3 பச்சை மிளகாய்
- 3 பல் பூண்டு
- சிறிய துண்டு இஞ்சி
- 1/4 ஸ்பூன் மிளகு
- 1 கிராம்பு
- 1/2 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஏலக்காய்
- 5 முந்திரி பருப்பு
- சிறிது கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
- ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை
- ஒரு கைப்பிடி அளவு புதினா இலை
சால்னா செய்ய:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/4 கப் வெங்காயம்
- 1 பிரிஞ்சி இலை
- 1/2 தக்காளி (நறுக்கியது)
- 1 சிறிய துண்டு பட்டை
- 1/4 தேக்கரண்டி சோம்பு
- 1½ கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலை
செய்முறை:
- முதலில் ஒரு மிக்சி ஜாரில் அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ️ ஒரு பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பிரிஞ்சி இலை, பட்டை, கறிவேப்பிலை மற்றும் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து அது குழையும் வரை வதக்கவும்.
- அதன்பின் அரைத்த விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
- பிரஷர் தானாக வெளியேறியதும் குக்கரைத் திறந்து, சால்னாவை நன்கு கொதிக்க விடவும்.
- சால்னா நன்கு கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைத்தால் சுவையான பச்சை சால்னா ரெடி!
- இது புரோட்டா, சப்பாத்தி, தோசை மற்றும் இடியாப்பம் என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
