Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
டயட்-ல இருந்தா இந்த கஞ்சியை காலையில் 2 கப் குடிங்க.. பசியும் எடுக்காது.. எடையும் குறையும்...
Pachai Payaru Kanji Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? அதுவும் தற்போது மழை பெய்து வருவதால், சமையலறையில் நீண்ட நேரம் நிற்க முடியாது. இந்நிலையில் டக்கென்று காலை டிபனை செய்ய பலரும் விரும்புவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஞ்சி தான் பெஸ்ட் டிபன்.
அதுவும் வெறும் கஞ்சியை செய்வதற்கு பதிலாக, பச்சை பயறு கஞ்சியை செய்து குடித்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் பிற சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் டயட்டில் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த காலை உணவு என்றே கூறலாம்.

இந்த கஞ்சியைக் குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இந்த கஞ்சிக்கு ஊறுகாய் அல்லது தேங்காய் துவையல் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளும் விரும்பி குடிக்குமாறு இருக்கும்.
உங்களுக்கு பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1/2 கப்
* அரிசி - 1/2 கப்
* வெந்தயம் - 10
* பூண்டு - 4 பல்
* தண்ணீர் - 5 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பச்சை பயறை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் அரிசியை 1/2 கப் சேர்த்து, இரண்டையும் நீரில் 2-3 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை எடுத்து, அதில் கழுவி வைத்துள்ள பச்சை பயறு
மற்றும் அரிசியை சேர்த்து, 5-6 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் 4 பல் பூண்டு சேர்த்து, 10 வெந்தயத்தையும் சேர்த்து
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக கஞ்சியின் சுவையைக் கூட்ட 1/4 கப் துருவிய தேங்காயை
சேர்த்து கிளறினால், சுவையான பச்சைப் பயறு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
