Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
1 கப் பச்சை பயறு இருந்தா.. மதியம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Pachai Payaru Kadayal Recipe In Tamil: மதியம் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சாதத்துக்கு அட்டகாசமாகவும் இருக்கும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறைக் கொண்டு ஒரு கடையல் செய்யுங்கள்.
இந்த கடையல் நீங்கள் வழக்கமாக செய்யும் கடையலைப் போன்றே இல்லாமல், தேங்காய் அரைத்து சேர்த்து செய்யும் கடையல் ஆகும். இந்த கடையலை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இந்த பச்சை பயறு கடையல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* பூண்டு - 5 பல்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் பச்சை பயறை கழுவி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, குழம்பு
மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, 3 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும். ஒருவேளை
பச்சை பயறை 5 மணிநேரம் ஊற வைத்து செய்தால், 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்பு குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பை
மத்து கொண்டு மசித்து விட வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், கொத்தமல்லி, சீரகம்
மற்றும் இஞ்சியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரில் உள்ள பருப்பை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பின் அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதையும் சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி,
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை குக்கரில் கொதித்துக் கொண்டிருக்கும்
பருப்புடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான பச்சை பயறு கடையல் தயார்.



Click it and Unblock the Notifications