Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Pachai Payaru Dosa With Inji Kara Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு எப்போதும் போன்று ஒரே மாதிரியான டிபன் செய்து கொடுத்து போரடித்துவிட்டதா? சற்று புதுமையான அதே சமயம் வித்தியாசமான சுவையில் டிபனை கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் பச்சை பயறு இருந்தால், அதைக் கொண்டு பச்சை பயறு தோசையையும், இஞ்சியைக் கொண்டு சட்னியையும் செய்யுங்கள். இந்த டிபன் காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் இந்த டிபனில் புரோட்டீன் அதிகமாக உள்ளது மற்றும் சட்னி செரிமான பிரச்சனையை நீக்கி, செரிமானத்தை சீராக்கும்.

உங்களுக்கு இந்த பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தோசை மற்றும் இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* இட்லி அரிசி - 1/4 கப்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி சட்னிக்கு...
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காஷ்மீரி மிளகாய் - 1
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு, இட்லி அரிசி, வெந்தயத்தை
எடுத்துக் கொண்டு, நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, மூடி வைத்து 5-6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 6 மணிநேரம் கழித்து, நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்
கொள்ள வேண்டும். அந்த நீரைக் கொண்டு மாவை அரைத்துக் கொள்ளலாம்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்த்து, 2 கைப்பிடி ஊற வைத்த பச்சை பயறு கலவையை சேர்த்து
முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மீதமுள்ள பச்சை பயறை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி மாவுடன் சேர்க்க வேண்டும். அதிகளவு நீரை
ஊற்றிவிட வேண்டாம். இல்லாவிட்டால் தோசை மொறுமொறுவென்று வராது. அதேப்
போல் மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது. மிதமான பதத்தில் கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை சேர்த்து
பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, இஞ்சியின் நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காஷ்மீரி வரமிளகாய், புளி, வெல்லம், உப்பு மற்றும்
வரமிளகாயை சேர்த்து, நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்
மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை
தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னிக்கு
அதிக நீரை ஊற்ற வேண்டாம்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான இஞ்சி சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
அரைத்து வைத்துள்ள மாவை மெல்லிய தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் அல்லது
நெய்யை ஊற்றி நன்கு வேக வைத்து, திருப்பி போடாமல் அப்படியே மடித்து
பரிமாறினால், சுவையான பச்சை பயறு தோசை தயார்.



Click it and Unblock the Notifications