Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
1 கப் ரேஷன் அரிசி வெச்சு... ஈவ்னிங் டைம்-ல வாயில் வெச்சதும் கரையுற இந்த ஸ்வீட் செய்யுங்க.. செமயா இருக்கும்..
Pacha Arisi Sweet Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் உங்கள் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்வீட் என்றால் பிடிக்குமா? அப்படியானால் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட்டை வாங்காமல், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அருமையான சுவையில் வாயில் வைத்ததும் கரையும் படியான ஸ்வீட்டை செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் ரேஷன் கடை பச்சரிசி அதிகம் இருந்தால், அதைக் கொண்டு பஞ்சு போன்ற மென்மையான ஸ்வீட்டை செய்யலாம். இந்த ஸ்வீட்டை செய்தால், உங்கள் பிள்ளைகள் போட்டி போட்டு காலி செய்வார்கள். அதோடு, அடிக்கடி செய்து கொடுக்க சொல்லியும் கேட்பார்கள்.

உங்களுக்கு பச்சரிசி ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* காய்ச்சிய பால் - 2 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பாதாம், பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரேஷன் கடை பச்சரிசி அல்லது
சாதாரண பச்சரிசி இருந்தால், அதில் நீரை ஊற்றி 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, அரிசியை நீரில் 2 முறை கழுவி விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியைப் போட்டு, அதில் 1/4 கப்
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண் ஸ்டின் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 கப்
காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் அரைத்த பச்சரிசி மாவை வடிகட்டி ஊற்றி, கைவிடாமல்
தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* மாவானது சற்று கெட்டியாகி, திரண்டு வரும் வரை கிளறி விட
வேண்டும்.
* மாவு நன்கு வெந்ததும், அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளற வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி விட்டு இறக்க
வேண்டும்.
* பின்பு ஒரு தட்டையான மற்றும் அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில்
நெய் தடவி, பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தாவை தூவி, அதன் பின் இந்த
அரிசி மாவை அதில் போட்டு சமமாகும் வரை நன்கு தட்டி விட வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தாவை தூவி குளிர
வைக்க வேண்டும்.
* கலவையானது நன்கு குளிர்ந்ததும், அந்த பாத்திரத்தை கவிழ்த்து
தட்டினால், ஸ்வீட் ஈஸியாக வரும்.
* இறுதியாக அதை துண்டுகளாக்கி பரிமாறினால், சுவையான பச்சரிசி ஸ்வீட்
தயார்.



Click it and Unblock the Notifications
