Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
வீட்டிலேயே பால் போளி செய்வது எப்படி?
Paal Poli Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் போளியை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் வீட்டில் போளி செய்து சுவைத்ததுண்டா? இல்லையென்றால் இன்று மாலை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள்.
அதுவும் பால் போளியை இன்று செய்யுங்கள். இந்த பால் போளி செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பால் போளி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - ஒரு சிட்டிகை
* நெய் அல்லது எண்ணெய்
* வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* பால் - 1 1/2 லிட்டர்
* சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது (2 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்)
* முந்திரி - 3 (பொடித்தது)
* பிஸ்தா - சிறிது (பொடித்தது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மைதா, ரவை, உப்பு, சிறிது நெய் சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் மெதுவாக வெதுவெதுப்பான நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு
பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, 3/4 அளவு
சுண்டும் வரை மிதமான அளவில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஊற வைத்த பால், சர்க்கரை
சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி, அந்த பாலை ஒரு அகலமான தட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை அளவில் உருண்டைகளாக
உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, அதை பூரி போன்று தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக
போட்டு பொரித்து எடுத்து, அதை தட்டில் உள்ள பாலில் வைக்க
வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து பூரிகளையும் பொரித்து, பாலில் போட்டு 10-20
நிமிடம் ஊற வைத்து, மேலே முந்திரி மற்றும் பிஸ்தாவைத் தூவினால்,
சுவையான பால் போளி தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications







