Latest Updates
-
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
வெங்காயம் தக்காளி தொக்கு
உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டை வைத்தே அற்புதமான ஓர் சைடு டிஷ் செய்யலாம். அது வேறொன்றும் இல்லை வெங்காயம் தக்காளி தொக்கு.
இரவு சப்பாத்தி, இட்லி அல்லது தோசைக்கு சிம்பிளாகவும், அதே சமயம் சுவையானதாகவும் ஓர் சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டை வைத்தே அற்புதமான ஓர் சைடு டிஷ் செய்யலாம். அது வேறொன்றும் இல்லை வெங்காயம் தக்காளி தொக்கு. இந்த தொக்கு இட்லி, தோசையை விட சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகளுக்கும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். முக்கியமாக இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்ற எளிமையான சைடு டிஷ்.

இப்போது வெங்காயம் தக்காளி தொக்கு எப்படி செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகைப் போட்டு தாளிக்கவும். அதன் பின் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
* பிறகு கரண்டியால் தக்காளியை மசித்து விட்டு, 2 நிமிடம் மூடி வைத்து அல்லது பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.
* அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து மசாலா கருகாமல் ஒரு நிமிடம் வதக்கி, பின் கால் கப் நீரை ஊற்றி 2 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
* தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு தயார்.
குறிப்பு:
* தொக்கு செய்வதற்கு பயன்படுத்தும் தக்காளி நன்கு கனிந்ததாக இருக்க வேண்டும்.
* மசாலா பொடிகளை சேர்த்த பின், பொடிகள் கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மசாலா பொடிகளை சேர்த்ததும் ஒருமுறை கிளறிய பின் உடனே நீரை சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலா பொடி கருகிவிட்டால், தொக்கின் சுவை மோசமாக இருக்கும்.
* உங்களுக்கு இன்னும் சுவையானதாக வேண்டுமானால், கரம் மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம். அதோடு தாளிக்கும் போது சிறிது சோம்பு விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications