Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
3 வெங்காயம் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க... டேஸ்ட் அள்ளும்..
Onion Manchurian Recipe in Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் மற்றும் வீட்டில் உள்ளோருக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு மஞ்சூரியன் என்றால் பிடிக்குமா? எப்போதும் கடைகளில் தான் மஞ்சூரியனை வாங்கி சாப்பிடுவீர்களா?
அப்படியானால் அதை வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு செய்யுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் மஞ்சூரியன் செய்ய தேவையான முட்டைக்கோஸ் இல்லையா? ஆனால் வெங்காயம் உள்ளதா? அப்படியானால் அந்த வெங்காயத்தைக் கொண்டு மஞ்சூரியனை செய்யுங்கள். இப்படி செய்யும் மஞ்சூரியன் செய்யும் போது, அது மிகவும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மைதா - 3 டீஸ்பூன்
* சோள மாவு - 3 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மஞ்சூரியனுக்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது + 1/4 கப்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயத் தாள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து, நீளவாக்கில் மெல்லிய
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு நறுக்கிய வெங்காயத்தை ஒரு பௌலில் போட்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் சிறிது நேரம் பிசைந்து விட
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், மைதா,
சோள மாவு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, உருண்டை பிடிக்கும்
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* உருண்டை பிடிக்கும் பதத்திற்கு பிசைந்ததும், ஒரு தட்டில் கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை டுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளைப் போட்டு, குறைவான தீயில்
வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, சிறிது
உப்பு தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் 1
ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை கொதித்துக் கொண்டிருப்பதோடு சேர்த்து நன்கு கிளறி, ஓரளவு
கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், அதில் ப்ரை செய்து
வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை கிளறி,
வெங்காயத் தாளைத் தூவி இறக்கினால், சுவையான வெங்காய மஞ்சூரியன்
தயார்.



Click it and Unblock the Notifications
