Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
வெங்காய பஜ்ஜி
நீங்கள் பஜ்ஜி பிரியரா? ஆனால் வீட்டில் உருளைக்கிழங்கு, வாழைக்காய் என்று எதுவும் இல்லையா? வெங்காயம் மட்டும் தான் வீட்டில் உள்ளதா? அப்படியானால் வெங்காய பஜ்ஜியை செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது சூடாக சாப்பிட வேண்டுமென்று தோன்றுமா? அதுவும் நீங்கள் பஜ்ஜி பிரியரா? ஆனால் வீட்டில் உருளைக்கிழங்கு, வாழைக்காய் என்று எதுவும் இல்லையா? வெங்காயம் மட்டும் தான் வீட்டில் உள்ளதா? அப்படியானால் வெங்காய பஜ்ஜியை செய்து சாப்பிடுங்கள். இந்த வெங்காய பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு சுவையான வெங்காய பஜ்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2 (வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.)
* கடலை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெங்காய பஜ்ஜி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










