2 முட்டையும், 1/2 கப் கோதுமை மாவும் வெச்சு.. மொறுமொறுன்னு ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க...

Posted By:

Omelette Bajji Recipe In Tamil: தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்த காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவெறும் ஏதாவது சாப்பிட தோன்றும். அதுவும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு புதுமையான, அதே சமயம் சத்தான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

கோதுமை மாவும், முட்டையும் இருந்தால், அவற்றைக் கொண்டு சூப்பரான ஆம்லெட் பஜ்ஜி செய்து கொடுங்கள். இந்த ஆம்லெட் பஜ்ஜி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Omelette Bajji How To Make a Omelette Bajji Recipe

உங்களுக்கு ஆம்லெட் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்லெட் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஆம்லெட்டிற்கு...

* முட்டை - 2
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மேல் மாவிற்கு..

* கோதுமை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் 65 மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின் அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள முட்டை கலவையை அப்படியே ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து ஆம்லெட்டு செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை இரண்டாக வெட்டி, பின் சற்று நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மேல் மாவிற்கு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சிக்கன் 65 மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், ஆம்லெட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கோதுமை மாவில் பிரட்டி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ஆம்லெட் பஜ்ஜி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion