Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
டயட்-ல இருந்தா.. ஓட்ஸை ஒருமுறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. செம டேஸ்ட்டா ஹெல்த்தியா இருக்கும்..
Oats Upma Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்களில் காலை உணவு பெரும்பாலும் ஓட்ஸ் தானா? ஓட்ஸ் என்றால் பொதுவாக அதைக் கொண்டு கஞ்சி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் ஓட்ஸ் கஞ்சி அவ்வளவு சுவையாக இருக்காது. இருந்தாலும் வேறு வழியின்றி அந்த ஓட்ஸ் கஞ்சியை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவார்கள்.
ஆனால் இனிமேல் ஓட்ஸை அப்படி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஓட்ஸைக் கொண்டு அருமையான சுவையில் உப்புமா செய்து சாப்பிடலாம். இந்த ஓட்ஸ் உப்புமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு ஓட்ஸ் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 12/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி - 1 துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப் + 1/4 கப்
* எலுமிச்சை சாறு - சிறிது
* வறுத்த வேர்க்கடலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,
கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய
இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நிறம் மாறத் தொடங்கியதும், அதில் பொடியாக நறுக்கிய
பீன்ஸ், கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக தக்காளி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு 4 நிமிடம் நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் ரோல்டு ஓட்ஸ் சேர்த்து கிளறி, முதலில் 1/4 கப் நீரை
ஊற்றி 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு மீண்டும் ஒரு 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான
தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, ஓட்ஸ் வெந்துவிட்டதா என்று
பாருங்கள். ஒருவேளை ஓட்ஸ் வேகவில்லை என்றால், மீண்டும் ஒரு 1/4 கப்
நீரை ஊற்றி கிளறி, 3-4 நிமிடம் மூடி வைத்து வேக வையுங்கள்.
* ஓட்ஸ் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை
சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லியைத் தூவி கிளறி பரிமாறினால்,
சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications







