Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி ரெசிபி... இதை டெய்லி சாப்பிட்டா எடை டக்குனு குறையுமாம்... ட்ரை பண்ணுங்க...!
Oats Idli Recipe in Tamil: ஆரோக்கிய பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கிய உணவுகளே உடல்நலத்தை பாதுகாக்க அவசியமானதாக இருக்கிறது. பெரும்பாலும் காலை உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் அன்றைய நாள் மிகவும் சுறுசுறுப்பானதாக இருக்கும். ஆரோக்கிய உணவுகள் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது ஓட்ஸ்.
வழக்கமாக ஓட்ஸை கஞ்சியாகத்தான் சாப்பிடுவோம், ஆனால் ஓட்ஸை பல சுவையான வழிகளில் சமைக்கலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்ஸ் இட்லி. இந்த ஓட்ஸ் இட்லி செய்வதற்கு எளிமையானது, சுவையானது அனைத்திற்கும் மேலாக ஆரோக்கியமானது. இந்த ஆரோக்கியமான காலை உணவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் ஓட்ஸ்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் உளுந்து
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- அரை ஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை 1 கொத்து
- அரை ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 துருவிய கேரட்
- கால் ஸ்பூன் மஞ்சள்
- அரை கப் ரவை
- அரை கப் தயிர்
- 1 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- 10 முந்திரி
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, 1 ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, ½ ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தூவி, ½ ஸ்பூன் துருவிய இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும்.
- இவை வதங்கியதும் 1 நறுக்கிய கேரட் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது ½ கப் ரவையைச் சேர்த்து, குறைந்த தீயில் வாசனை வரும் வரை
வறுக்கவும். பின்னர்
ஓட்ஸ் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்.
- நன்கு ஆறியதும் அதில் ½ கப் தயிர் மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் எதுவும் இல்லாதபடி நன்கு கலக்கவும்.
- இப்போது 2 ஸ்பூன் கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
- இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.
- இந்த கலவையை 20 நிமிடங்கள் அல்லது ரவை தண்ணீரை உறிஞ்சும் வரை வைக்கவும்.
- இப்போது இந்த மாவை வழக்கமாக இட்லி வேக வைப்பது போல இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
- இட்லி நன்கு வெந்ததும் அதை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி ரெடி!



Click it and Unblock the Notifications
