Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
மட்டன் கோலா உருண்டை!

தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கிய ஆட்டுக்கறி - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பொட்டுகடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இளம் ஆட்டுக்கறியை பொடியாக நறுக்கி வாங்கவும். இது அரைப்பதற்கு எளிதாக இருக்கும். கறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். கறியில் கொழுப்பு போன்றவை இருந்தால் அவற்றை நீக்கிவிடவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கறியை போட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அதில் பொட்டுக்கடலைமாவு, தேங்காய், சோம்பு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, கெட்டியாக நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒரு தடவைக்கு ஐந்து ஆறாக, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மட்டன் கோலா தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications