Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு
சிக்கன் பிரியர்களுக்காக ஒரு அருமையான மற்றும் வித்தியாசமான சிக்கன் குழம்பு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியானது பாரசீக ஸ்டைல் ரெசிபி. இந்த ரெசிபியின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இதில் மாதுளையை சேர்த்து செய்வது தான். இதனால் இந்த ரெசிபியின் சுவை வித்தியாசமாக இருக்கும்.
இங்கு அந்த பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபியானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (தட்டியது)
தக்காளி - 2 (அரைத்தது)
பட்டை தூள் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மாதுளை - 1 (சுத்தம் செய்தது)
வால்நட்ஸ் - 1/4 கப் (வறுத்தது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து சூடேற்றி, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் சிக்கனை சேர்த்து உப்பு தூவி, 4-5 நிமிடம் மிதமானது தீயில் வதக்கி விட வேண்டும்.
சிக்கனானது பொன்னிறமாக மாறும் போது, அதில் பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின் மிக்ஸியில் மாதுளை மணிகளைப் போட்டு அரைத்து, அதனை சிக்கனுடன் சேர்த்து 8-10 நிமிடம் நன்கு கிளறி, வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் வால்நட்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 20-25 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications