Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
காளான் ஆம்லெட்
காளான் ஆம்லெட் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் காளான், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. மேலும் இதனை காலையில் சாப்பிட்டால், அது உடலுக்கு வேண்டிய சக்தியையும் கொடுக்கிறது.
இப்போது அந்த காளான் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
காளான் - 150 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
முட்டை - 6 (அடித்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்களை ஊற்றி காய்ந்தும், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் காளான் சேர்த்து தீயை குறைவில் வைத்து, காளான் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையில் வதக்கிய கலவையை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் முட்டையை கலவையை ஆம்லெட்டுகளாக போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
