Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இஞ்சி, எலுமிச்சை இறால் கிரேவி

தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 1 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி
இறால் கிரேவி செய்முறை
இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
சின்ன வெங்காயத்துடன், தக்காளி மல்லித்தழை,கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி நன்கு அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாரு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.
இத்துடன் கழுவிவைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.



Click it and Unblock the Notifications