Latest Updates
-
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா?
மிகவும் பிரபலமான சில இந்திய சிக்கன் ரெசிபிக்கள்!!!
உலகிலேயே நல்ல சுவையான மற்றும் காரமான உணவுகள் வேண்டுமானால், அதற்கு இந்தியாவிற்கு தான் வர வேண்டும். ஏனெனில் இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளின் சுவைக்கு ஈடாக, இவ்வுலகில் வேறு எந்த உணவுகளும் வராது. இதற்கு காரணம் இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே பல்வேறு ஸ்டைல்களில் உணவுகளானது சமைக்கப்படும். அதிலும் அசைவ உணவுகளின் சுவை தான் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் மிகவும் சுவையானதாக இருக்கும்.
அவைகளைப் பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும். அந்த வகையில் இங்கு அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான சுவை இருக்கும். ஆகவே இங்கு இந்தியாவில் இருக்கும் சில பிரபலமான சிக்கன் ரெசிபிக்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து வார இறுதியில் அவற்றை முயற்சி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

நீலகிரி சிக்கன் குருமா
தமிழ்நாட்டில் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் நீலகிரிக்கு சென்றால், நீலகிரி சிக்கன் குருமா வாங்கி சாப்பிடுங்கள். இந்தியாவில் இது மிகவும் பிரபலமான சிக்கன் ரெசிபியாகும். மேலும் இந்த ரெசிபியின் நிறம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில், இதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் போன்றவற்றை அரைத்து செய்வதால் தான். இதைக் கூட வீட்டிலேயே ட்ரை செய்யலாம்.
செய்முறை

பஞ்சாபி சிக்கன் மசாலா
பஞ்சாப்பிற்கு சென்றால், தவறாமல் பஞ்சாபி சிக்கன் மசாலாவை வாங்கி சாப்பிடுங்கள். ஒருவேளை அங்கு செல்ல முடியவில்லையா, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். மேலும் இந்த பஞ்சாபி சிக்கன் மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் சேர்க்கப்படும் கரம் மசாலா தான்.
செய்முறை

கோரி ரொட்டி கிரேவி
இது கர்நாடகாவில் அமைந்துள்ள மங்களூர் ஸ்டைல் ரெசிபி. இது கூட அருமையான சுவையில் இருக்கும். இந்த மங்களூர் ஸ்டைல் ரெசிபியை வீட்டிலேயே முயற்சி செய்ய ஆசையா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை

கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு
கூர்க் என்றால் அனைவருக்கும் பன்றி இறைச்சி தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் கூர்க்கில் சிக்கன் குழம்பு கூட பிரபலம் தான். எனவே இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பை சுவைத்துப் பார்க்க மறவாதீர்கள்.
செய்முறை

ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு
அசைவ உணவுகளை காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். அந்த வகையில் நல்ல காரமான அசைவ உணவு வேண்டுமென்றால் ஆந்திராவில் தான் கிடைக்கும். அதே சமயம் ஆந்திரா ஸ்டைலில் காரம் மட்டுமின்றி, நல்ல சுவையும் இருக்கும்.
செய்முறை

செட்டிநாடு பெப்பர் சிக்கன்
தமிழ்நாட்டில் நல்ல சூப்பரான அசைவ உணவு சாப்பிட வேண்டுமானால், செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பெஸ்ட். ஏனெனில் இந்த ஸ்டைல் உணவில் பல்வேறு மசாலா பொருட்களை சேர்த்து சிக்கனுடன் நன்கு சமைத்து செய்வார்கள். வேண்டுமெனில் இந்த வாரம் இதை முயற்சி செய்யுங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications