Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நா...ஊறும்... முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி!!!
விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, உடலுக்கு சத்தை வழங்கும் வகையில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அதற்கு முட்டை ஸ்பாஞ்ச் தான் சரியானது. அதிலும் இதுவரை முட்டையை அப்படியே வேக வைத்து தான் சாப்பிட்டிருப்போம்.
ஆனால் இந்த ரெசிபியில் அந்த முட்டையில் சில பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்து சாப்பிடுவோம். மேலும் இந்த ரெசிபி டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். இப்போது இந்த முட்டை ஸ்பாஞ்ச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - பாதி (நறுக்கியது)
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் சிறு சிறு பௌல்களை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெயை தடவி, முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பௌல்களை வைத்து, தண்ணீரானது பௌலை விட அதிகமாக இல்வாதவாறு இருக்க வேண்டும்.
பின்னர் குக்கரை முழுவதுமாக மூடி விடாமல், ஓரளவு மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து, இறக்கி விடவும்.
இப்போது சூப்பரான முட்டை ஸ்பாஞ்ச் ரெடி!!! இதனை பட்டர் பேப்பரைக் கொண்டு பக்கவாட்டில் கவர் செய்து பரிமாறலாம்.
குறிப்பு: இதற்கு குக்கருக்கு பதிலாக, இட்லி பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications