Latest Updates
-
எந்த காய்கறியும் இல்லாம இந்த எம்டி பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
முட்டை சீஸ் ரோல்
காலை வேளையில் தோசை, இட்லி என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள முட்டை சீஸ் ரோலை முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமான காவை உணவும் கூட. மேலும் சீக்கிரம் செய்து முடிக்க கூடியது.
இப்போது அந்த முட்டை சீஸ் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முட்டை - 2
சீஸ் - 8 துண்டுகள்
பிரட் - 8 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 சிட்டிகை (துருவியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சோள மாவை தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்ம நிலையில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து, பின் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவை சிறிதை சீஸ் மேல் வைத்து, நீர்ம நிலையில் கலந்து வைத்துள்ள சோள மாவு கொண்டு ரோல் போன்று சுருட்டிக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சுருட்டி வைத்துள்ள ரோல்களை வைத்து, நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான முட்டை சீஸ் ரோல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
