Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
சிம்பிளான... தந்தூரி சிக்கன் ரெசிபி
பொதுவாக தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த வாரம் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அதிலும் மைக்ரோ ஓவன் இல்லாமலேயே தந்தூரி சிக்கனை செய்யலாம். அது எப்படியென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அதைப் படித்து இந்த வாரம் உங்கள் வீட்டில் தந்தூரி சிக்கனை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். சரி, இப்போது அந்த தந்தூரி சிக்கனின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
ஊற வைப்பதற்கு...
தயிர் - 1 கப்
வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
பின்னர் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கெட்டியான பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, 30-40 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை வைத்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் திறந்து சிக்கனை மறுபக்கம் திருப்பி விட்டு 10-15 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து சிக்கனையும் வேக வைக்க வேண்டும். இப்போது தந்தூரி சிக்கன் ரெடி!!!



Click it and Unblock the Notifications
