Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுவையான... சிக்கன் சாலட்!

தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயத்தாள் - 4
வெண்ணெய் - 1/2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 250 கிராம்
கருப்பு திராட்சை - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
மயோனைஸ் - 1/2 கப்
ஆப்பிள் - 1
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிக்கனை நன்கு கழுவ வேண்டும். பின் அந்த சிக்கனை ஒரு வாணலியில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகுத்தூள் போட்டு வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அதை இறக்கி குளிர வைக்கவும்.
பிறகு வெங்காயத் தளை நறுக்கி, வெண்ணெய்யில் பொரிக்கவும். பின் உருளைக்கிழங்கை வேக வைத்து, அதன் தோலை உரித்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
அதே போல் ஆப்பிளையும், உருளைக்கிழங்கை வெட்டியதைப் போல் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் கருப்பு திராட்சையை கழுவி, இரண்டாக நறுக்கி தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பெரிய பௌலை எடுத்துக் கொண்டு, அதில் வேக வைத்து குளிர வைத்த சிக்கன், பொரித்த வெங்காயத்தாள், உலர்ந்த திராட்சை, மயோனைஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். பின் அதன் மேல் சிறிது உப்பு, மிளகுத்தூளைத் தூவவும்.
இறுதியாக கருப்பு திராட்சையை வைத்து அலங்கரித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.
இப்போது குளிர்ச்சியான, சுவையான, வித்தியாசமான சிக்கன் சாலட் ரெடி!!!



Click it and Unblock the Notifications