Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு
உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? அதிலும் கருவாட்டை குழம்பு செய்து சாப்பிட பிடிக்குமா? அப்படியெனில் நம்ம செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து, சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 40-50
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 15-20 (தோலுரித்தது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
மாங்காய் - 1 (நீளமாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நெத்திலி கருவாடை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதன் தலையை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மாங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் கருவாட்டை சேர்த்து 5-10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications