Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை
அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகிவிடுவார்கள்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு மட்டன் கோலா உருண்டையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 3/4 கப்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை ரெடி!!!
Image Courtesy: lekhafoods



Click it and Unblock the Notifications
