Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு
கடல் உணவுகள் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கும். அதிலும் கடல் உணவுகளுக்கு பிரியர்கள் அதிகம். குறிப்பாக நண்டு பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய நண்டை எப்போது பார்த்தாலும், வறுவல் செய்து சாப்பிட்டு அழுத்துப் போயிருந்தால், பெங்காலி ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிடலாம்.
ஏனெனில் பெங்காலி ஸ்டைல் உணவுகள் அனைத்தும் மிகவும் ருசியுடன் இருக்கும். எனவே பெங்காலி ஸ்டைலில் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட, இது ஒரு சூப்பர் டிஷ். சரி, அந்த பெங்காலி ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
நண்டு - 2
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
பிரியாணி இலை - 2
பட்டை - 1
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் நண்டுகளை சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நண்டுகளைப் போட்டு 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்பு அதனை இறக்கி, நண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, நீரை கீழே ஊற்றிவிடாமல் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின் அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்பு அத்துடன் வேக வைத்துள்ள நண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 7-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
இறுதியில் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை அதனுடன் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான பெங்காலி நண்டு குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications