Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பகாரா முட்டை மசாலா
அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று தான் முட்டை. அதிலும் முட்டை மசாலா தான் பெரும்பாலானோருக்கு பிடித்ததாகவும் இருக்கும். இத்தகைய முட்டை மசாலாவை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பலவாறு சமைப்பார்கள். அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சுவையில் சூப்பராக இருக்கும்.
இப்போது ஹைதராபாத்தில் செய்யக்கூடிய பகாரா முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4 (வேக வைத்தது)
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
புளி சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வேக வைத்துள்ள முட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வேர்க்கடலை, எள், தேங்காய் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து முட்டை மற்றும் புளி சாற்றினை ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பச்சை வாசனை போனதும், இறுதியில் கரம் மசாலா சேர்த்து, 2 நிமிடம் கிளறி கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பகாரா முட்டை மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications

