Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இறால் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 2
பச்சை மிளகாய் - 2+3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 2 பல் (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் முற்றிலும் வடியும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், முட்டை வெள்ளை கரு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை அந்த கலவையில் நனைத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள பச்சை மிளகாய், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளி கெட்சப், மிளகாய் சாஸ் மற்றும் சோயா சாஸை ஊற்றி, நன்கு கொதிக்கும் வரை கிளற வேண்டும்.
கலவையானது நன்கு கொதிக்கும் போது, அதோடு வினிகர் சேர்த்து 3-4 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை போட்டு, 6-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
ஒரு வேளை கிரேவி அதிக நீருடன் காணப்பட்டால், அப்போது சிறிது சோள மாவை சேர்த்து கிளறினால், கிரேவி சற்று கெட்டியாகிவிடும். பின் அதனை இறக்கிவிடலாம்.
இப்போது சுவையான இறால் மஞ்சூரியன் ரெடி!!! இதனை ப்ரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
குறிப்பு: வேண்டுமென்றால் இதனை சற்று கிரேவியாக சமைத்து, சாதத்துடன் சாப்பிட்டாலும், அருமையாக இருக்கம்.



Click it and Unblock the Notifications
