For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசத்தலான ஆட்டு ரத்த பொரியல்

By Mayura Akilan
|

Aattu Ratha Poriyal Recipe
அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

ஆட்டு ரத்தம் – 1 கப்

சின்ன வெங்காயம் -150 கிராம்

வர மிளகாய் – 3

சீரகம் – 2 டீ ஸ்பூன்

கடுகு – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைகரண்டி

பொரியல் செய்முறை

ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் வரமிளகாயை கிள்ளி போடவும்.

நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். ரத்தம் தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக தேங்காய் துறுவல் போட்டு கிளறி இறக்கவும். அசத்தலான ஆட்டு ரத்தப் பொரியல் தயார். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

English summary

Aattu Ratha Poriyal Recipe | அசத்தலான ஆட்டு ரத்த பொரியல்

‘Ratha poriyal’ a dish prepared with goat's blood there are separate non-vegetarian
Story first published: Friday, May 25, 2012, 16:58 [IST]
Desktop Bottom Promotion