Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Coimbatore Style Sambar Recipe in Tamil: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உணவென்றால் அது சாம்பர்தான். சாம்பாரையும், தமிழர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சாதமாக இருந்தாலும் சரி, இட்லி, தோசையாக இருந்தாலும் சரி சாம்பார் இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. சாம்பார் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் விருப்பமான உணவாக இருக்கிறது. சாம்பார் பொதுவானதாக இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சாம்பார் செய்வதற்கென தனிப்பட்ட வழிமுறை உள்ளது.

தமிழ்நாட்டிலேயே பலவகை சாம்பார் உள்ளது. காரைக்குடி சாம்பார், மெட்ராஸ் சாம்பார், கும்பகோணம் சாம்பார் என பலவகை சாம்பார்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு சாம்பாரும் ஒரு விதத்தில் தனித்துவமானது. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது கோயம்பத்தூர் சாம்பார். இந்த சாம்பார் மற்ற ஊர் சாம்பார் போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் இந்த சாம்பாரை செய்வது மிகவும் எளிதானதும் கூட.
உங்களுக்கு கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 1 முருங்கைக்காய்,
- 1 தக்காளி
- 1 கப் துவரம்பருப்பு, ஊறவைத்து வேகவைத்தது
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் தனியா (கொத்தமல்லி) விதைகள்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் புளிக்கரைசல்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 4 வர மிளகாய், ஊறவைத்தது
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1/2 ஸ்பூ கடுகு
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 ஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில் துவரம்பருப்பைத் தேவையான அளவு நீரில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
- பருப்பு ஊறியதும், நீரை வடித்துவிட்டு, பருப்பை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு, அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி, சுமார் 4 விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரின்பிரஷர் தானாகவே குறையும் வரை அப்படியே விடவும்.
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதிகத் தீயில் அவை வேகும் வரை கொதிக்கவிடவும். அனைத்தும் வெந்ததும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், சீரகம், தனியா, வெந்தயம், பெருங்காயம், வர மிளகாய் மற்றும் தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து, நறுமணம் வரும் வரை வறுக்கவும். இதை அறை வெப்பநிலைக்கு வரும் வரை ஆறவிடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில், மசாலாப் பொருட்களைச் சேர்த்து வேகவைத்த காய்கறிகளில் உள்ள நீரை சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த மசாலா விழுதை மீண்டும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும், அதனுடன் கரைத்து வைத்த புளிச்சாறை சேர்த்து, வேகவைத்த பருப்பு மற்றும் சுமார் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, சாம்பாரைக் கொதிக்கவிடத் தொடங்கவும். பின்னர் உப்பு சேர்த்து, நன்கு கிளறிவிடவும்.
- சாம்பார் கொதிக்கத் தொடங்கும் வேளையில், ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெயை சூடுபடுத்தவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் கடுகு சேர்த்து அது வெடித்துப் பொரியும் வரை காத்திருக்கவும். பின்னர் கறிவேப்பிலையைச் சேர்த்து, குறைந்த தீயில் சில நொடிகள் வதக்கவும்.
- சாம்பார் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, நல்லெண்ணெயில் தாளித்த கலவையைச் சாம்பாரில் சேர்த்து, மேலே சிறிதளவு நெய் விட்டு நன்கு கிளறிவிடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கோவை சாம்பார் சாப்பிடத் தயாராகிவிட்டது.



Click it and Unblock the Notifications