Latest Updates
-
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
ஜூலை 16-ல் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்காய் பாயா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - ஆட்டுக்கால் பாயாவை விட சூப்பரா இருக்கும் -
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
1 தேங்காயும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
'ஸ்ராவண' மாதத்தில் சிவபெருமானின் ஆசியால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவில்களிலும், பூஜையிலும் தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா?
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Guru Peyarchi 2026: நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறார். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, குரு பகவான் மே 26 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்கு செல்கிறார். இந்த குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. அதுமட்டுமின்றி இந்த கடக ராசியானது குரு பகவான் உச்சம் பெறும் ராசியாகும். இந்த கடக ராசியில் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் குருவின் அருளால் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 2026 குரு பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை அதிகம் சந்தித்தாலும், அதைவிட வருமானம் அதிகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதுவும் சுப செலவுகளையே அதிகம் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையில் உள்ள பிரச்சனைகள் தீரும். முன்னேற்ற பாதை திறக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும், அதற்கு பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் தீர்வு காண்பது உத்தமம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். குடும்ப மற்றும் தன வீட்டில் குரு இருப்பதால், மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் உறவுகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். மேலும் குருவின் 5 ஆம் பார்வை விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பல புதிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருட்களை வாங்க பணத்தை செலவிடுவீர்கள். வேலையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதை செய்தாலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு உச்ச பலனைத் தரப்போகிறார். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் வேலையில் சில போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும். இருந்தாலும், அதை சமாளிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் இருக்கும். முக்கியமாக வேலை தொடர்பாக எடுக்கும் எந்த ஒரு புது முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம், நிலம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சுப செலவுகளை செய்ய நேரிடும். சமூகத்தில் செவ்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இதன் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும், நல்ல லாபமும் கிடைக்கும். முக்கியமாக குருவின் அருளால் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். அதுவும் குருவின் 7 ஆம் பார்வை ராசி மீது விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும், அதில் வெற்றியைக் காண்பார்கள். எடுக்கும் ஒவ்வொரு வேலையையும் சிக்கலின்றி சுமூகமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதை உணர்வீர்கள். இக்காலத்தில் வேலை தொடர்பாக பல பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





