Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மீன் கட்லெட்

தேவையான பொருட்கள் :
கானாங்கெளுத்தி மீன் - 1
உருளைக்கிழங்கு - 3
காரட் - 1
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
கறித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 டீஸ்பூன்
முட்டை - 2
பிரெட் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் காளாங்கெளுத்தி மீனை நன்கு கழுவி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, உதிர்த்து கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கையும் வேக வைத்து, தோலை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, மீன், கறித்தூள், கரம் மசாலாத் தூள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், அதில் உருளைக்கிழங்கு, கேரட் போட்டு வதக்கவும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு பிரட்டி, இறக்கி விடவும். இந்த கலவையை அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, பச்சை வாசனை போகும் வரை வதக்கினால் போதும்.
பின்னர் இதனை கட்லெட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய வைக்க வேண்டும். எண்ணெயானது காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லேட்டை, முட்டை கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி உடனே எண்ணெயில் போட்டு வேக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மீன் கட்லெட் ரெடி!!!
குறிப்பு : முட்டையில் கட்லெட்டை நனைக்கும் போது உடனே எண்ணெயில் போட வேண்டும். இல்லையென்றால் எண்ணெயில் போடும் போது கட்லெட்டில் வெடிப்பு ஏற்படும்.



Click it and Unblock the Notifications
