Latest Updates
-
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
உருளைக்கிழங்கும், தக்காளியும் இல்லாமலேயே பூரிக்கு அட்டகாசமான மசாலா செய்யலாம்.. எப்படின்னு பாருங்க...
No Potato Poori Masala Recipe: பெரும்பாலானோரின் வீடுகளில் மங்களகரமான நாட்களில் பூரி செய்யும் வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படியொரு பழக்கம் உள்ளதா? அந்த பூரிக்கு எப்போதும் உருளைக்கிழங்கைக் கொண்டு மசாலா செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால் இன்று அந்த உருளைக்கிழங்கும், தக்காளியும் சேர்க்காமல் எப்படி பூரிக்கு மசாலா செய்வதென்று காண்போம். இந்த உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் டஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி வெங்காயமும், பட்டாணியும் நன்கு வேகும் வரை மூடி வைத்து
வேக வைக்க வேண்டும்.
* அடுத்து நீரில் கடலை மாவை சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும். பின் அதை அப்படியே வாணலியில் ஊற்றி, தேவையான அளவு நீரையும்
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்கக வேண்டும்.
* மசாலா மிகவும் கெட்டியாக இருப்பது போன்று தெரிந்தால், சிறிது நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லி மற்றும்
எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான பூரி மசாலா
தயார்.
குறிப்பு:
* எலுமிச்சை சாற்றினை சேர்க்க பிடிக்காவிட்டால், வெங்காயத்தை
வதக்கிய பின் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* உருளைக்கிழங்கு பிரியர்கள் என்றால் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து
மசித்து சேர்த்துக் கொள்ளலாம்.
* அளவுக்கு அதிகமாக கடலை மாவை சேர்த்துவிடாதீர்கள். இல்லாவிட்டால்
மசாலாவின் சுவை பாழாகிவிடும். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில்
மட்டும் எடுத்து நீரில் கட்டிகளின்றி கரைத்து பயன்படுத்துங்கள்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications