Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
எப்பவும் ஒரே சுவையில் சிக்கன் கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இந்த ஸ்டைலில் ட்ரை பண்ணுங்க..
Nepali Style Chicken Gravy Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அதுவும் சிக்கன் கிரேவி செய்து, சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், ஒருமுறை நேபாளி ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கிரேவி நீங்கள் எப்போதும் செய்யும் சிக்கன் கிரேவியின் சுவையில் இருந்து வேறுபட்டது. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த கிரேவியின் ஸ்பெஷலே அதற்கு வறுத்து அரைக்கும் மசாலா தான். இந்த மசாலா தான் கிரேவியின் சுவையையே அதிகரிக்கிறது. இப்படி சிக்கன் கிரேவியை செய்தால், அது சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு நேபாளி ஸ்டைல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நேபாளி ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 15
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 6
* வரமிளகாய் - 12
* பூண்டு - 12 பல்
* இஞ்சி - 2-3 இன்ச்
* மஞ்சள் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* கடுகு எண்ணெய் - 100 கிராம்
* பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 1 கிலோ
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - 100 மிலி
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி,
மிளகு, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன்
பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை வாக்க வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 10 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கைப்பிடி கொத்தமல்லியைத் தூவி, 100 மிலி நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் சிக்கனை
நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான நேபாளி ஸ்டைல் சிக்கன் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











