எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...

Posted By:

Nellore Kaaram Dosa Recipe In Tamil: பெரும்பாலானோரின் வீடுகளில் காலை உணவு இட்லி அல்லது தோசையாகவே இருக்கும். ஏனெனில் இது தான் ஈஸி மற்றும் சத்தானதும் கூட. ஆனால் எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டால், ஒரு கட்டத்தில் அது அலுத்துப்போய்விடும். உங்களுக்கும் அப்படி அலுத்துப்போய்விட்டதா? இன்று உங்கள் வீட்டில் தோசை சுட போகிறீர்களா?

அப்படியானால் வெறும் தோசையை சுடுவதற்கு பதிலாக, ஒருமுறை நெல்லூர் கார தோசையை செய்யுங்கள். இந்த தோசை அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இதற்கு தேங்காய் சட்னி இருந்தாலே போதும், கணக்கில்லாமல் வீட்டில் உள்ளோர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

Nellore Kaaram Dosa How To Make a Nellore Kaaram Dosa Recipe

உங்களுக்கு நெல்லூர் கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காஷ்மீரி வரமிளகாய் - 3
* தக்காளி - 1
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 5 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* தோசை மாவு

செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் காஷ்மீரி வரமிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை மாவைக் கொண்டு தோசை ஊற்றி, அதன் நடுவே ஒரு ஸ்பூன் அரைத்த காரத்தை வைத்து பரப்பி விட்டு, எண்ணெய் ஊற்றி 1 நிமிடம் வேக வைத்து, அப்படியே மடித்து எடுத்தால், சுவையான நெல்லூர் காரம் தோசை தயார்.
* ஒருவேளை உங்களுக்கு முட்டை தோசை தான் வேண்டுமென்றால், தோசையை ஊற்றி, பின் முட்டையை நடுவே உடைத்து ஊற்றி ஒரு ஸ்பூன் காரத்தை வைத்து அப்படியே பரப்பி விட்டு, எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து, அடிப்படியே மடித்து எடுத்தால், முட்டை தோசை தயார்.

Image Courtesy: Archana's Kitchen

[ of 5 - Users]
Story first published: Friday, April 26, 2024, 7:50 [IST]
Desktop Bottom Promotion