Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
3 நெல்லிக்காயும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட
Nellikkai Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் காலை டிபனாக இருக்குமா? இப்படி செய்யும் இட்லிக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியைத் தான் அதிகம் செய்ய சொல்லி கேட்பார்களா? அதுவும் சட்னி என்றால் தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி என்று தான் செய்வீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் நெல்லிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த நெல்லிக்காயைக் கொண்டு சட்னி செய்து கொடுங்கள்.

நெல்லிக்காயில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே நெல்லிக்காயை அப்படியே சாப்பிட மறுக்கும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு, அதைக் கொண்டு சட்னி செய்யும் போது, வேண்டாம் என்றே கூறமாட்டார்கள். அந்த அளவில் நெல்லிக்காய் சட்னி ருசியாக இருக்கும்.
உங்களுக்கு நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 கப்
* நெல்லிக்காய் - 3
* பச்சை மிளகாய் - 4
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் நெல்லிக்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், நெல்லிக்காய், 4 பச்சை
மிளகாய், 3 பல் பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கொத்து கறிவேப்பிலை, சிறிய துண்டு புளி, 1 கையளவு
கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* சட்னியை நன்கு மென்மையாக அரைத்ததும், அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த சட்னியில் 1 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு சேர்த்து, பின் கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
