Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
3 நெல்லிக்காய் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Amla Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியை தான் செய்வீர்களா? அப்படியே சட்னி செய்வதாக இருந்தாலும், ஒரே மாதிரியான சட்னியைத் தான் அடிக்கடி செய்வீர்களா? உங்கள் வீட்டில் நெல்லிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த நெல்லிக்காய் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த நெல்லிக்காய் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே மழை நேரத்தில் இந்த நெல்லிக்காயை சட்னியை செய்து சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம்.

உங்களுக்கு நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - 1 கையளவு
* பூண்டு - 4 பல்
* நெல்லிக்காய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 1 கையளவு கொத்தமல்லி, 4 பல்
பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு சிறு துண்டு புளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஊற்றி மிகவும் கெட்டியாக இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்
மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
