Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இட்லி, தோசைக்கு இந்த கூரைக்கடை தண்ணி சட்னியை செய்யுங்க.. தொட்டு சாப்பிடாம ஊத்தி குடிப்பாங்க...
Thanni Chutney Recipe In Tamil: காலை வேளையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை கூரைக்கரை தண்ணி சட்னியை செய்யுங்கள். இந்த தண்ணி சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். அதோடு இந்த சட்னியை செய்தால், தொட்டு சாப்பிடாமல் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள்.

உங்களுக்கு தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* தேங்காய் - 1/4 கப்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 5-6 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/2 கப் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை துண்டுகளாக்கி சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை, தேங்காய்,
புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் அவற்றைப்
போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை அரைத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications