Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
வெயிலுக்கு ஏற்ற ஜில்லென்ற நன்னாரி பால் சர்பத் ரெசிபி - செஞ்சு பாருங்க, குளுகுளுனு சூப்பரா இருக்கும்
Nannari Paal Sarbath Recipe in Tamil: கோடைகாலம் வந்தாலே இளநீர், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் போன்றவற்றின் விற்பனை பலமடங்கு அதிகரித்துவிடும். கொளுத்தும் வெயிலை சமாளிக்க இந்த பொருட்கள் ஓரளவு உறுதியாக இருக்கும். இந்த குளிர்ச்சியான பொருட்களின் வரிசையில் நன்னாரி சர்பத் எப்போதும் முக்கிய இடத்தில் இருக்கும். நன்னாரி சர்பத் குளிர்ச்சியானது என்பதை தாண்டி அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

நன்னாரி சிரப் பொதுவாக நன்னாரி வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது வயிற்றுப் புண்ணை சரி செய்வது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நன்னாரி சர்பத் பொதுவாக கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும், ஆனால் நன்னாரி பால் சர்பத் அனைத்து கடைகளிலும் கிடைக்காது. நன்னாரி சர்பத்தை விட இது கூடுதல் சுவையானது மற்றும் குளிர்ச்சியானது, மேலும் இதை தயாரிப்பதும் எளிதானது.
உங்களுக்கு ஜில்லென்ற நன்னாரி பால் சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ நன்னாரி பால் சர்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பால்
- 2 ஸ்பூன் பாதாம் பிசின்
- 2 ஸ்பூன் ஊறவைத்த சப்ஜா விதைகள்
- 2 ஸ்பூன் நன்னாரி சிரப்
- தேவையான அளவு ஐஸ் கட்டிகள்
செய்முறை:
- ஒரு கிண்ணத்தில் 1 மேசைக்கரண்டி பாதாம் பிசினை எடுத்துக்கொண்டு, அதனுடன் சுமார் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- இதை மூடி வைத்து, இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் பார்த்தால் இது ஜெல்லி போல காட்சியளிக்கும்.
- மற்றொரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சப்ஜா விதைகளை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.
- வெறும் 10 நிமிடங்களிலேயே இவை நன்கு ஊறிவிடும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- பால் சர்பத் செய்வதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இப்போது தயாராக உள்ளது.
- ஒரு டம்ளரில் முதலில் சில ஐஸ்கட்டிகளைச் சேர்க்கவும்.
- பின்னர் அதில் ஊற வைத்த பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.
- பின்னர் ஊற வாய்த்த சப்ஜெ விதைகளைச் சேர்க்கவும்.
- அதனுடன் 1 ஸ்பூன் நன்னாரி சிரப் சேர்க்கவும்.
- பின்னர் காய்ச்சி ஆறவைத்த ஜில்லென்ற பாலை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான நன்னாரி பால் சர்பத் ரெடி!



Click it and Unblock the Notifications
