Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும்
Nadan Mambala Kulambu Recipe in Tamil: கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம்தான். கலர் கலரான தித்திக்கும் மாம்பழங்களை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. பலரும் மாம்பழம் சாப்பிடுவதற்காகவே எப்போது கோடைகாலம் என்று காத்திருப்பார்கள். இந்த எதிர்பார்ப்பால்தான் மாம்பழம் 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது.

மாம்பழத்தை பெரும்பாலான மக்கள் அப்படியே சாப்பிடத்தான் விரும்புவார்கள். ஆனால் மாம்பழத்தை வைத்து பல சுவையான உணவுகளை செய்யலாம். அதில் ஒன்றுதான் கேரளா நாடன் ஸ்டைல் மாம்பழக் குழம்பு. மாம்பழத்தை வைத்து குழம்பு செய்யலாம் என்று நம்மால் நம்ப முடியாது, ஆனால் கேரளாவில் இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.
இந்த பாரம்பரிய கேரளா குழம்பில் நன்கு பழுத்த மாம்பழங்களின் புளிப்பு கலந்த இனிப்புச் சுவையானது, மசாலாப் பொருட்கள், புளி மற்றும் சிறிதளவு தேங்காய் ஆகியவற்றின் கலவையுடன் இணைகிறது. இந்த புளிப்புச் சுவையுள்ள மாம்பழக் குழம்பில் இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு என அனைத்து சுவையும் கலந்திருக்கும். இது மாம்பழ சீசனில் பெரிதும் விரும்பப்படும் ஒரு பாரம்பரிய உணவாக உள்ளது. உண்மையில் இந்த நாடன் மாம்பழக் குழம்பை செய்வது மிகவும் எளிதானதாகும்.
உங்களுக்கு இந்த கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பபை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாடன் மாம்பழ குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 பெரிய பழுத்த மாம்பழங்கள்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 பச்சை மிளகாய்கள் (கீறியது)
- 1 ஸ்பூன் சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
அரைக்க:
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- தேங்காயுடன் சீரகம் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் நறுக்கிய மாம்பழத் துண்டுகளையும், அவற்றின் கொட்டைகளையும் சேர்த்துக்கொள்ளவும். அதில் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை நன்கு கொதிக்கவிடவும். மாம்பழங்கள் வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
- இதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். இதை கிரேவியின் மேல் ஊற்றி நன்கு கலக்கவும். இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications