Latest Updates
-
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்! -
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்!
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Mysore Egg Gravy Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான மைசூர் ஸ்டைல் பருப்பு முட்டை குழம்பு செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக தோன்றும். மேலும் இந்த வித்தியாசமான முட்டை குழம்பை செய்வது மிகவும் சுலபம்.

இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பரா இருக்கும். இந்த முட்டைக் குழம்பு வழக்கமான முட்டைக்குழம்பு போல இருக்காது, இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். ஒருமுறை இந்த முட்டை பருப்புக் குழம்பை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி இதைத்தான் செய்வார்கள். கர்நாடகாவில் குறிப்பாக மைசூரில் இந்த குழம்பு மிகவும் பிரபலமானதாகும்.
உங்களுக்கு மைசூர் ஸ்டைல் முட்டை பருப்புக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் முட்டை பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மசூர் பருப்பு - ½ கப்
- முட்டை - 4
- பச்சை மிளகாய் - 2
- வெங்காயம் - 2
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- பூண்டு - 8 பல்
- தக்காளி - 2 (பெரியது)
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 2 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- மசூர் பருப்பை இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமான தண்ணீரில் அலசி அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கழுவி காம்பு நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் சுத்தமாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். அதில் கடுகு, மற்றும் சீரகம் சேர்த்து கடுகு பொரியும் சத்தம் வரும் வரை விடவும்.
- பின் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- தக்காளி நன்கு வெந்ததும் மசித்து விடவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்க்கவும். பச்சை வாசம் போக சிறிது நேரத்திற்கு நன்கு வதக்கவும்.
- கழுவி ஊற வைத்த மைசூர் பருப்பை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேக விடவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- பருப்பு நன்றாக வெந்து குழம்பு கொதிக்கத் தொடங்கியதும், அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- பின் முட்டையின் ஒரு பகுதி நன்றாக வெந்திருக்கும், மெதுவாக கரண்டியால் முட்டையை திருப்பி விட்டு நன்கு வேக விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் மைசூர் பருப்பு முட்டைக் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
