Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குண்டு குண்டா பந்து போல மைசூர் போண்டா செய்யணுமா? அப்ப இந்த சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
Mysore Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து கொடுப்பீர்களா? அதுவும் நீங்கள் போண்டா செய்வதாக இருந்தால், அடுத்தமுறை மைசூர் போண்டாவை செய்யுங்கள். அதுவும் இந்த போண்டாவை வெறும் மைதா மாவில் செய்யாமல் கோதுமை மாவையும் சேர்த்து செய்யும் போது, சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக மைசூர் போண்டா ஹோட்டல்களில் கொடுக்கப்படுவது போன்று குண்டாக பந்து போன்று இருக்க வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள். இப்படி போண்டாவை செய்யும் போது இன்னும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மைசூர் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் மைசூர் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* மைதா - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* புளித்த மோர் - 2 கப்
* சூடான சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு,
சுவைக்கேற்ப உப்பு, சீரகம், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும்.
* பின் புளித்த மோரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் எண்ணெயை 2 டீஸ்பூன்
ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கைகளால்
நன்கு அடித்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சூடானதும், ஒரு
குழிக்கரண்டியை எடுத்து, சூடான எண்ணெயில் வைத்து, பின் கரண்டியில்
எண்ணெயை எடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் போட்டு, பின்
எண்ணெயில் அந்த போண்டாவை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்
சுவையான மற்றும் குண்டு குண்டான பந்து போன்ற மைசூர் போண்டா தயார்.
இப்படி கரண்டியைப் பயன்படுத்தும் போது போண்டா அழகாக வட்டமாக பந்து
போன்று இருக்கும்.



Click it and Unblock the Notifications