Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆட்டு ரத்த பொரியலை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Mutton Ratha Poriyal Recipe In Tamil: வார விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிட்டு, அந்நாளை ஜாலியாக என்ஜாய் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் பெரும்பாலும் மட்டன் தான் செய்வீர்களா? மட்டனில் ஆட்டு இரத்தம் என்றால் ரொம்ப பிடிக்குமா?
அந்த ஆட்டு இரத்தத்தை பொரியல் செய்து குடல் குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் இருப்போருக்கு ஆட்டு ரத்தம் பிடிக்காதா? அப்படியானால் அவர்களுக்கு ஆட்டு இரத்தத்தை இந்த பக்குவத்தில் செய்து கொடுங்கள். இதனால் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

முக்கியமாக இந்த ஆட்டு இரத்தம் செய்வதற்கு நறுமணமிக்க கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று எதையும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அந்த இரத்த பொரியல் வாயில் வைக்க முடியாத அளவில் மோசமாக இருக்கும். எனவே மணமில்லாத ரீபைன்டு எண்ணெயில் செய்யுங்கள். அதோடு, இந்த பொரியலுக்கு உப்பையும் சேர்க்காதீர்கள்.
உங்களுக்கு ஆட்டு இரத்த பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு இரத்த பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 8 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* ஆட்டு இரத்தம்
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஆட்டு இரத்தத்தை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, நீரை
முற்றிலும் வடித்துவிட்டு, பின் கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அந்த இரத்தத்தை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க
வேண்டும்.
* முக்கியமாக இந்த பொரியலுக்கு உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது. அதேப்
போல் நீரையும் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இரத்தத்தில் இருந்தே நீர்
பிரிந்து வரும்.
* இரத்தத்தை சேர்த்ததும், தொடர்ந்து கிளறி விட வேண்டும். நீர்
முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
ஆட்டு இரத்த பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications